இஸ்லாமிய பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட முதலமைச்சர்
India
Bihar
By Fathima
பீகார் மாநில அரசு விழாவில் இஸ்லாமிய பெண் ஒருவர் அணிந்திருந்த ஹிஜாபை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் விலக்க முயன்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்வில் இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து கொண்டு, தனது பணி ஆணையை பெற வருகை தந்துள்ளார்.
இதன்போது, அந்த பெண்ணின் ஹிஜாபை மாநில முதல்வர் நிதிஷ் குமார் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து ஹிஜாபை அவர் விலக்க முயன்றார். இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.