உணவு பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Food Crisis Sri Lanka Government
By Chandramathi Jun 06, 2023 06:45 PM GMT
Chandramathi

Chandramathi

அதிகரித்துள்ள கோழி இறைச்சியின் விலைகள், அடுத்த சில வாரங்களில் குறையலாமென அகில இலங்கை கோழிப்பண்ணையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளமை தற்காலிகமானதென வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

கோழி இறைச்சியின் விலை 

உணவு பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல் | Chicken Price In Sri Lanka

கடந்த சில நாட்களாக கோழி இறைச்சி, மீன், காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விலைகள் பெருமளவில் அதிகரித்தது. அது இன்று வரை தொடர்கின்றது.

எனினும், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்ய முடியாததுடன், இது குறித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும் குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்படவில்லையென அச்சங்கத்தின் தலைவர் அஜித் குணசேக்கர குறிப்பிட்டுள்ளார்.