குறைக்கப்பட்டது கோழி இறைச்சியின் விலை

Sri Lanka
By Fathima Sep 22, 2023 04:27 AM GMT
Fathima

Fathima

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கோழியிறைச்சி கிலோவொன்றின் விலை, 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

கோழியிறைச்சி உற்பத்தி நிறுவனங்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

சகல விதமான கோழியிறைச்சிகளினதும் கிலோவொன்றின் விலையை இன்று முதல் 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் கோழியிறைச்சி ஆயிரத்து 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

அதேநேரம் எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னர், ஒரு கிலோகிராம் கோழியிறைச்சியின் விலையை மேலும் 100 ரூபாவால் குறைப்பதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.