இலங்கையில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை உண்பவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

Sri Lanka Ministry of Health Sri Lanka Sri lanka Food Recipes Egg
By Mayuri Jun 26, 2024 06:35 AM GMT
Mayuri

Mayuri

கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் நன்கு சமைக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும், பச்சையாகவோ அல்லது வேகவைக்கப்படாத கோழியின் பாகங்களையோ உட்கொள்வதை தவிர்க்குமாறும் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்தில் இந்தியாவில் பரவிய பறவைக் காய்ச்சல் (H9) குறித்து சுகாதார அமைச்சகம் கவனம் செலுத்திய நிலையில், சுகாதார அமைச்சகத்தின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தற்போது, ​​மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் பிரிவு H5 மற்றும் H7 விகாரங்கள் மற்றும் H9 இன்ப்ளூயன்ஸா போன்றவற்றையும் கண்டறிய தேவையான PCR பரிசோதனை வசதிகளை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்

பறவைகள் மத்தியில் பரவும் பறவைக் காய்ச்சல், சில சமயங்களில் மனிதர்களையும் தாக்கும் என்பதால், பறவைகள் மற்றும் அவற்றின் கழிவுகளை தொடுவதை தவிர்க்கவும், அவதானமாக செயற்படவும் சுகாதார அமைச்சகம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை உண்பவர்களுக்கு அவசர அறிவுறுத்தல் | Chicken Eggs Food In Sri Lanka

பறவைகளையோ அவற்றின் எச்சங்களையோ தொட வேண்டாம் என்றும், கோழிப்பண்ணைகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகள் காணப்பட்டால், உடனடியாக உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW