தேங்காய் எண்ணெய் விற்பனையில் ஏற்படப்போகும் மாற்றம்

Sri Lankan Peoples Ministry of Agriculture Coconut price
By Dilakshan Jul 14, 2025 12:04 PM GMT
Dilakshan

Dilakshan

சந்தையில் பொதி செய்யப்படாத தேங்காய் எண்ணெய் (தளர்வான தேங்காய் எண்ணெய்) விற்பனையை நிறுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணவக்க தெரிவித்துள்ளார்.

தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் பல்வேறு வகையான எண்ணெய்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், இவற்றை உட்கொள்வதால் தொற்றாத நோய்கள் ஏற்படும் என்று பலர் கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் சந்தையில் வெளியிடப்படும் எண்ணெய்கள் உற்பத்தியாளர் உட்பட தேவையான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய பொதியுடன் சந்தைக்கு வெளியிடப்பட வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் கௌரவிப்பு

நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் கௌரவிப்பு

கலப்பட எண்ணெய் விற்பனை

இந்த சூழ்நிலைக்கு ஏற்ப சில மாதங்கள் அவகாசம் அளிப்பதாகவும், பின்னர் இதை செயல்படுத்த திட்டமிடுவதாகவும் சாந்த ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

தேங்காய் எண்ணெய் விற்பனையில் ஏற்படப்போகும் மாற்றம் | Changes In Coconut Oil Sales

சந்தையில் தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் கலப்பட எண்ணெய் விற்பனையைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாடசாலை பாட நேரங்களில் ஏற்படப்போகும் மாற்றம்

பாடசாலை பாட நேரங்களில் ஏற்படப்போகும் மாற்றம்

முறையற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை! வெளியாகும் புதிய நடைமுறை

முறையற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை! வெளியாகும் புதிய நடைமுறை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW