சந்திரிக்காவின் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பாதுகாப்பு நீக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.அப்படி எந்த நீக்கமும் செய்யப்படவில்லை.
சந்திரிக்காவின் பாதுகாப்பு
30 வரை குறைக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். அது தவறு. அவருக்கு தற்போது 57 பேர் வழங்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கை வழங்கப்பட்டதன் பின்னர் அமைச்சரவை இது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசாங்கம் நியாயமான முடிவெடுக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தேவையான பாதுகாப்பு மாத்திரம் வழங்கப்படும் எனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் |