நாடாளுமன்ற நிதி தெரிவுக் குழுவிற்கு புதிய தலைவர்

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan political crisis Harsha de Silva
By Fathima Jun 07, 2023 05:50 PM GMT
Fathima

Fathima

நாடாளுமன்ற நிதி தெரிவுக்குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நிதி தெரிவுக்குழு

நாடாளுமன்ற நிதி தெரிவுக் குழுவிற்கு புதிய தலைவர் | Chairman Of Parliamentary Finance Select Committee

நாடாளுமன்ற நிதி தெரிவுக்குழு உறுப்பினர்கள் இந்த யோசனைக்கு ஏகமனதாக ஆதரவு வழங்கியுள்ளனர்.  

ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வாவை இந்த பதவிக்கு நியமிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி பொதுமக்கள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.