இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்

Ceylon Electricity Board Minister of Energy and Power Kanchana Wijesekera Mega Power
By Fathima Sep 05, 2023 09:40 AM GMT
Fathima

Fathima

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

இன்று (05.09.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

சூரிய சக்தி மின் நிலையம்

குறித்த சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் | Ceylon Electricity Board Bill And Kanchana

அத்துடன் இலங்கையில் நிலக்கரி அனல் மின் நிலையங்களை நிர்மாணிப்பதில்லை என அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

சம்பூரில் நிலக்கரி அனல்மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்திற்கு பதிலாக சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.