கல்முனையில் 30 ஜூஸ்உ முடித்த மாணவர்களுக்கான கௌரவிக்கும் நிகழ்வு
Ramadan
Sri Lankan Peoples
Eastern Province
Kalmunai
By Rakshana MA
கல்முனையில் குர்ஆன் மத்ரஸா ஒன்றிலிருந்து சுமார் 29 மாணவ, மாணவிகள் முழுக் குர்ஆனையும் தஜ்வித் சட்டங்களோடு கற்று மனனம் செய்து வெளியாகியுள்ளனர்.
குறித்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வானது எதிர்வரும் 13ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக மத்ரஸா நிருவாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வினை மத்ரஸாவின் அதிபர், கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் ஆகியோரின் தலைமையில் கல்முனை ஹுதா ஜூம்ஆ பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.
குர்ஆன் மனனம்
இந்நிகழ்வில் உலமாக்கள், முஅல்லிமாக்கள் பள்ளிவாசல் நிருவாகத்தினர், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |