அரசு ஊழியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு
அரச ஊழியர்களுக்காக நடாத்தப்பட்ட 100 மணித்தியாள 2ஆம் மொழி சிங்கள பாட நெறியை பூர்த்தி செய்த அரச ஊழியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (11) மாலை தோப்பூர் -அல்ஹம்றா மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு
இதில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு அரச நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 80 அரச ஊழியர்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.
மேலும், இதன் போது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை, இந்த நிகழ்வில் அதிதிகளாக தர்கா நகர் கல்வியல் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.ஹாரிஸ் மரைக்காயர், 2 ஆம் மொழி பாட விரிவுரையாளர் ஏ.ஜே.சஜிரி, முன்னால் கோட்டக் கல்வி பணிப்பாளர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், 2 ஆம் மொழி திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








