கண்டி - சாஹிரா தேசிய பாடசாலையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா
கண்டி சாஹிரா தேசிய பாடசாலையின் தேவைக்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த செயற்பாடானது 35 இலட்சம் ரூபா செலவினைக் கொண்டுள்ளதோடு அதற்கான அடிக்கல் நாட்டு விழா அக்குறணை சாஹிரா தேசிய பாடசாலையில் நேற்று(16.07.2024) நடைபெற்றிருந்தது.
விடுக்கப்பட்ட கோரிக்கை
அக்குறணை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் இது தொடர்பில் சனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார் .
அதற்கு இணங்க ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 35 இலட்சம் ரூபா செலவில் அக்குறணை சாஹிரா தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்திற்கான விளையாட்டு அரங்கினை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வு பதில் அதிபர் எஸ். எம். எஸ் சுலைஹா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்குறணை முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதில் தொழிலதிபர் டி. எம். எஸ். நவாஸ் , பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர் மாணவிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |