இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
திறைசேரி உண்டியல்களை ஏலத்தில் விடுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 02ஆம் திகதி திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன.
இந்தநிலையில், 1,40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளன.
திறைசேரி உண்டியல்கள்
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனை செய்யப்படவுள்ளன.
364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |