வாகன குத்தகை தொடர்பில் மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு
உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட நிதி குத்தகை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மத்திய வங்கி புதிய வழிகாட்டல்களை அறிவித்துள்ளது.
இதன்படி, மோட்டார் வாகனங்களை வாங்குதல் அல்லது பயன்படுத்துதல் நோக்கத்திற்காக வழங்கப்பட்ட கடன் வசதிகள் தொடர்பாக அதிகபட்ச கடன் - மதிப்பு விகிதத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மத்திய வங்கியால் வெளியிட்டுள்ளன.
அதிகபட்ச கடன் விகிதங்கள்
நேற்று முதல், இந்த புதிய வழிகாட்டல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி, வணிக வாகனங்களுக்கான அதிகபட்ச கடன் விகிதத்தை 70வீதமாகவும், தனியார் வாகனங்களுக்கான அதிகபட்ச விகிதத்தை 50வீதமாகவும் மத்திய வங்கி திருத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூலை மாதம், குத்தகை வசதிகளுக்கான அதிகபட்ச கடன் விகிதங்களை வணிக வாகனங்களுக்கு 80வீதமாகவும், தனியார் வாகனங்களுக்கு 60, முச்சக்கர வண்டிகளுக்கு 50வீதமாகவும் மற்றும் பிற வாகனங்களுக்கு 70வீதமாகவும் மத்திய வங்கி நிர்ணயித்திருந்தது.