அதிகரித்துள்ள இறக்குமதி : மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
இந்த வருடத்தின் ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் ஆடை இறக்குமதிக்காக 470.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடை இறக்குமதி
குறித்த அறிக்கையின்படி,
கடந்த ஆண்டு (2023) ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில், ஆடை மற்றும் ஆடைத் துறையுடன் தொடர்புடைய இறக்குமதிக்காக 383.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டது.
2023 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஆடை மற்றும் ஆடை உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 87.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 22.7 சதவீதம் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் மட்டும் ஆடை மற்றும் ஆடை உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்ய செலவிடப்பட்ட தொகை 246.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
இதேவேளை, சிங்கள புத்தாண்டு காரணமாக, துணி இறக்குமதி அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.