மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்டுள்ள தகவல்

By Fathima Jun 01, 2023 08:30 PM GMT
Fathima

Fathima

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து நிதிக்கொள்கையை உறுதியாக பேண வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட மத்திய வங்கி ஆளுநர், பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

எனினும், கடுமையான நிதிக் கொள்கை காரணமாக, செப்டம்பர் மாதம் 70% பண வீக்க அதிகரிப்பை தடுக்க முடிந்ததாகவும் தற்போது மிகவும் வேகமாக பணவீக்கம் குறைவடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பணவீக்கம் குறைந்ததால், அதிகரித்த வட்டி வீதத்தை ஓரளவு குறைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் ஜனவரி மாதம் திறைசேரி முறிகளின் மூன்று மாத வட்டி வீதம் 33 வீதமாகக் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பணவீக்கம் மிக வேகமாகக் குறைந்து ஜூலை மாத இறுதியில் ஒற்றை இலக்கத்திற்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.