இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

Central Bank of Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Nov 24, 2025 11:30 AM GMT
Fathima

Fathima

மோசடியான வியாபாரங்களில் அகப்பட்டு பணத்தை இழக்காதீர்கள் என இலங்கை மத்திய வங்கி அவசர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 

சமூக ஊடகங்களில் போலி வணிக முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக வங்கியின் அதிகாரப்பூர்வ சின்னத்தை தவறாகப் பயன்படுத்தும் மோசடி நபர்கள் மற்றும் குழுக்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அங்கீகாரமளிக்கப்பட்ட நிறுவனங்கள் 

இது தொடர்பான தெளிவூட்டலில், விழிப்பாக இருக்கவும்! இலங்கை மத்திய வங்கியின் இலட்சிணையை தவறாகப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பல ஏமாற்றுபேர்வழிகள் மோசடியான வியாபாரங்களை இந்நாட்களில் நடாத்தி வருகின்றனர்.

இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை! | Central Bank Of Sri Lanka Announcement

இந்த வியாபாரங்கள் எவற்றுடனும் இலங்கை மத்திய வங்கிக்கு தொடா்பு இல்லை.

இத்தகைய மோசடியான வியாபாரங்களுக்கு அகப்பட்டு உங்களுடைய எஞ்சியுள்ள பணத்தை இழக்காதீா்கள்.

இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரமளிக்கப்பட்ட நிதியியல் நிறுவனங்கள் தொடர்பான தகவல்களுக்கு இந்த இணைப்பைப் பார்க்கவும் - https://www.cbsl.gov.lk/ta/அங்கீகாரமளிக்கப்பட்ட-நிறுவனங்கள்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.