இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

By Mayuri Sep 12, 2024 06:19 AM GMT

290,000 மில்லியன் ரூபா பெறுமதியான பிணைமுறிகள், எதிர்வரும் 18ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, 2028ஆம் ஆண்டு முதிர்வுக் காலத்தைக் கொண்ட 100,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணைமுறிகளும், 2029ஆம் ஆண்டு முதிர்வுக் காலத்தைக் கொண்ட 150,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணைமுறிகளும், 2034 ஆம் ஆண்டு முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணைமுறிகளும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு | Central Bank Of Sri Lanka Announcement

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW