மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம்: விசாரணை செய்ய தீர்மானம்
இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் அண்மைய சம்பள அதிகரிப்பு தொடர்பில் விசாரணை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (01.02.2024) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, மார்ச் 05ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை விசாரணைக்காக அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடும் விமர்சனம்
இதேவேளை இலங்கை மத்திய வங்கி மீது நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ச கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
நாட்டின் பொருளாதாரம் பூச்சியத்திற்கு வீழ்ச்சியடைந்த விவகாரத்தில் மத்திய வங்கிக்கே அதிக பொறுப்பு உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனால் கடமைகளையும் பொறுப்புக்களையும் புறக்கணித்துள்ள பிரதான அரச நிறுவனமாக மத்திய வங்கியே காணப்படுவதாகவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.