பில்லியன் கணக்கில் நோட்டுக்களை அழித்த மத்திய வங்கி! வெளியான அதிர்ச்சி தகவல்
கடந்த 2024ஆம் ஆண்டில் மத்திய வங்கியினால் 95 பில்லியன் நோட்டுக்கள் பாவனையில் இருந்து அழிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
பாவனைக்கு விடப்பட்டிருந்த பண நோட்டுக்களில் பொதுமக்கள் சேதம் விளைவித்த 95.3 பில்லியன் பெறுமதியான 154.01 பண நோட்டுக்கள் மத்திய வங்கியினால் கடந்த வருடத்தில் பாவனையில் இருந்து மீளப் பெறப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
புதிய பணநோட்டுக்கள்
அதே போன்று 493.22 பில்லியன் பெறுமதியான புதிய பண நோட்டுக்கள், 0.6 பில்லியன் பெறுமதியான நாணயக்குற்றிகள் என்பவற்றையும் கடந்த வருடத்தில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
u
அத்துடன் பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 275 மில்லியன் புதிய பணநோட்டுக்களும் மத்திய வங்கியினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |