சீமெந்து விலை 100 ரூபாயால் அதிகரிப்பு
Sri Lanka Economic Crisis
Cement Price in Sri Lanka
Economy of Sri Lanka
Dollars
By Fathima
சீமெந்தின் விலை குறிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், அதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சீமெந்தின் விலை 100 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நிர்மாணத்துறை சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தை தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர தெரிவித்துள்ளார்.
வர்த்தக அமைச்சர் அறிக்கை
சீமெந்தின் விலை 300 ரூபாயினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் அறிக்கை வெளியிட்ட போதிலும் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனால் சந்தையில் இரண்டாயிரத்து 100 ரூபாயாக காணப்பட்ட சீமெந்து மூடையொன்று, தற்போது, இரண்டாயிரத்து 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.