பொதுத் தேர்தலில் வெற்றி தொடர்பில் ஜனாதிபதியின் நம்பிக்கை
Anura Kumara Dissanayaka
Sri lanka election 2024
Sri Lanka election updates
General Election 2024
Parliament Election 2024
By Kamal
பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தேர்தலில் வாக்களித்ததன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் வலுவான மக்கள் ஆணை கிடைக்கப்பெறும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அமைதியான தேர்தல்
தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை கட்சியின் ஆதரவாளர்கள் அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாகவும் நாட்டில் அமைதியான முறையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இதுவும் ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.