பதவி விலக போதில்லை! மத்திய வங்கி ஆளுநர்
சம்பள அதிகரிப்பு பிரச்சினைகளுக்காக தாம் பதவி துறக்கப் போவதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் பணியாளர்கள் அண்மையில் தங்களது சம்பளங்களை உயர்த்திக் கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் இந்தப் பிரச்சினைகக்காக பதவி விலக போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பதவி விலக போவதில்லை
நாட்டுக்காக செய்யக்கூடிய சேவையை செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே பதவியை விட்டு விலகிச் செல்ல நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனத்தின் பிரதானி என்ற வகையில் பணியாளர்கள் தொடர்பில் தமக்கு பொறுப்பு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் மீளாய்வு செய்யப்படுவதாகவும் அதன் அடிப்படையில் பரிந்துரைகள் செய்யப்படும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.