பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை
மரங்கள் நடுவதன் மூலம் மிகப்பெரிய இலாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ஊடகங்களில் விளம்பரம் செய்யப்படும் முதலீட்டு வாய்ப்புகள் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டமாக இருக்கலாம் என இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான மோசடித் திட்டங்களில் ஈடுபட்டு உங்கள் பணத்தை இழந்து விடாதீர்கள் எனவும் மத்திய வங்கி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
முதலீட்டு வாய்ப்புகள்
இவை முதலீட்டு வாய்ப்புகள் என விளம்பரம் செய்யப்பட்டாலும், அவை சட்டவிரோதமான பிரமிட் நிதியமைப்புகளாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
எனவே, இவ்வாறான திட்டங்களில் முதலீடு செய்வதனை தவிர்க்குமாறு மத்திய வங்கி, பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சில நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியின் பெயரைத் தவறாக பயன்படுத்தி இந்த விளம்பரங்களைச் செய்து வருவதாகவும், இது தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட பிரிவுகள் இந்த மோசடிகளை விசாரணை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |