திருகோணமலை மாவட்டத்தில் மேய்ச்சல் நில தேவை குறித்து விசேட கலந்துரையாடல்
திருகோணமலை மாவட்டத்தில் போதியளவிலான மேய்ச்சல் நிலம் இல்லாததால் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து சிறப்புக் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கபட்டது.
குறித்த கலந்துரையாடலானது, இன்று (24) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமார தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
முக்கிய கலந்துரையாடல்
இதன்போது திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, தம்பலகாமம், கந்தளாய் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் போதியளவிலான மேய்ச்சல் நிலம் இல்லாததால், கறவை மாடுகளுக்கு உணவளிப்பதில் கால்நடை உரிமையாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
மேலும், குறித்த பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், கால் நடை மிருக வைத்தியர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குறித்த துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



