இரத்தினபுரி மாவட்டத்தில் காச நோய் அபாயம்
இரத்தினபுரி மாவட்டத்தில் காச நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
காசநோய் தடுப்பு தொடர்பாக நேற்று (16.04.2023) நடைபெற்ற பொது விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் இலங்கையில் 331 காசநோயாளிகள் கண்டறியப்பட்டனர்.

காச நோய்
இதில் 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இது கண்டறியப்பட்ட நோயாளர்களில் சுமார் 10 சதவீதம் என்பது கவலைக்குரிய விடயம்.
இலங்கையில் வருடாந்தம் சுமார் 14,000 காசநோயாளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டாலும், பத்தாயிரம் பேர் மட்டுமே கண்டறியப்படுகின்றனர்.
சுமார் 4000 நோயாளர்கள் பதிவாகாமல் இருப்பதற்கு அறியாமையே முக்கிய காரணம் என கூறியுள்ளார்.