வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து கட்டணம்! போக்குவரத்து அமைச்சின் முக்கிய அறிவிப்பு

Sri Lanka Transport Fares In Sri Lanka Money Bimal Rathnayake Sri Lanka Transport Board
By Fathima Dec 17, 2025 07:55 AM GMT
Fathima

Fathima

வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து பயணிகள் கட்டணத்தை செலுத்தக்கூடிய பேருந்து வழித்தடங்களின் பட்டியல் போக்குவரத்து அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட 24 வழித்தடங்களில் வங்கி அட்டை கொடுப்பனவுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதை அமைச்சு உறுதி செய்துள்ளது.

அந்த வகையில்,

  • மாகும்புர - பதுளை
  • கொழும்பு - பஸ்ஸரை
  • பாணந்துரை - கண்டி 
  • கடவத்தை - பதுளை
  • கடவத்தை - மஹரகம
  • மாத்தறை - அக்குரஸ்ஸ 
  • மாத்தறை - திஸ்ஸமகாராம
  • மாத்தறை - கொழும்பு
  • தங்காலை - மாகும்புர
  • அங்குணுகொலபெலஸ்ஸ - கொழும்பு
  • மாத்தறை - மாகும்புர
  • கொழும்பு - வவுனியா
  • மஹரகம - கடவத்தை
  • பாணந்துறை - பத்தரமுல்லை
  • மத்துகம - கொழும்பு
  • பதுளை - பண்டாரவளை
  • மொனராகல - பிபிலை
  • சிரிகல வைத்தியசாலை - வெல்லவாய
  • மொனராகல - மஹியங்கனை
  • மாகும்புர - காலி
  • காலி - கடுவெல
  • மாத்தறை - கடுவெல
  • கடுவெல - காலி
  • கடவத்த - காலி 

உள்ளிட்ட பேருந்து வழித்தடங்களில் இவ்வாறு வங்கி அட்டை மூலமாக கொடுப்பனவுகளை செலுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இலங்கையின் பொது போக்குவரத்து முறையை நவீனமயமாக்கும் நோக்கில், வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணத்தை செலுத்தும் புதிய முறை 2025 நவம்பர் 24 ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

மாகும்புரை பல்முறை போக்குவரத்து மையத்தில், போக்குவரத்து, வீதிகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க தலைமையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.