இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ்.தீவகப் பகுதிக்கு விஜயம்!
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் (Eric Walsh) தீவக பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது கடற்றொழில் அமைப்புக்கள் மற்றும் தீவக பெண்கள் வலையமைபின் பிரதிநிதிகளை
சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பானது இன்று (12) காலை யாழ்.புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் சனசமுக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
சந்திப்பில் வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்ச்சன் பிகிராடொ, தீவக பெண்கள் வலையமைப்பினர், தீவக பகுதி கடற்றொழில் அப்புக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கனேடிய உயர்ஸ்தானிகர்
இதேவேளை, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) கடந்த (02) ஆம் திகதி முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பெற்ற வெற்றிக்காக தனதும் கனேடிய அரசாங்கத்தினதும் மக்களினதும் மனப்பூர்வமான வாழ்த்துத் தெரிவித்த கனேடியத் தூதுவர், ஊழலை ஒழித்து நாட்டில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அர்ப்பணிப்பணிப்பை பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |