கனடாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

By Fathima Jun 13, 2024 01:33 AM GMT
Fathima

Fathima

கனேடிய (canada) மாகாணமொன்றில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நோய் ஒன்று பரவி வருவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐந்து வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள் மற்றும் தடுப்பூசி பெறாத பதின்ம வயதினர் மற்றும் இளம் வயதினரை இந்த நோய் அதிகம் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

கனடாவின் ரொரன்றோ (Toronto) மாகாணத்தில், இன்வாசிவே மெனிங்கோகாக்கள் டிசீஸ் (IMD) என்னும் நோய் அதிகரித்து வருவாதாக அம்மாகாண சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பாக்டீரியாவால் பரவும் நோய்த்தொற்று

இது ஒரு பாக்டீரியாவால் (bacteria) பரவும் நோய்த்தொற்று எனவும், எச்சில் மூலமும், பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகுவதன் மூலமும் இந்நோய் பரவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கனடாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Canada Public Health Warnings Bacterial Disease

மூளையில் மீதுள்ள மெல்லிய உறை மற்றும் தண்டுவடம் வரையும், இரத்தக்குழாய்களுக்குள்ளும் இந்த தொற்று பரவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நோய்த் தாக்கம் வேகமாக பரவி அது மரணத்தையும் ஏற்படுத்தக் கூடும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.