ட்ரம்பிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய கனடிய பிரமதர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கனடா பிரதமர் மார்க் கார்னி மன்னிப்பு கோரியுள்ளார்.
அமெரிக்க வரி விதிப்பை கண்டித்து கனடாவின் ஒன்டாரியோ மாகாண முதல்வர் வெளியிட்ட விளம்பரத்துக்காக அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
வட அமெரிக்க நாடான கனடாவின் மிகப்பெரிய மாகாணமான ஒன்டாரியோ மாகாணத்தின் முதல்வர், சமீபத்தில் அமெரிக்க வரி விதிப்பு குறித்து ஒரு விளம்பர காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அமெரிக்காவுக்கு இறக்குமதி
அதில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ரீகன் பேசிய உரையில் இருந்து சில பகுதிகளை எடுத்து விளம்பரத்தில் பயன்படுத்தியிருந்தார்.

இதற்கு, டொனால்டு ரீகன் அறக்கட்டளையும் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, கனடா உடனான அனைத்து வகை வர்த்தக பேச்சுக்களும் முடிவுக்கு வருவதாகவும் மற்றும் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு பத்து சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படுவதாகவும் ட்ரம்ப் அறிவித்தார்.
பொருளாதார ஒத்துழைப்பு
இதன்பின் மார்க் கார்னி, ஒன்டாரியோ மாகாண முதல்வரை தொடர்பு கொண்டு விளம்பரத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தியிருந்தார்.

இந்த பிண்ணனியில், சமீபத்தில் டொனால்ட் ட்ரம்பும் மற்றும் மார்க் கார்னியும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்கொரியா சென்றிருந்தனர்.
அங்கு நடந்த விருந்தில் பங்கேற்றபோது டொனால்ட் ட்ரம்பிடம் மார்க் கார்னி மன்னிப்பு கோரியுள்ளார்.
மன வருத்தம்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “கனடா பிரதமர் என்ற முறையில் அமெரிக்காவுடன் நல்லுறவை பேணுவது என் பொறுப்பு.

இதனால், நான் டொனால்ட் ட்ரம்பிடம் மன்னிப்பு கோரினேன் அத்தோடு ஒன்டாரியோ மாகாண முதல்வரிடம் விளம்பரத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தியிருந்ததை டொனால்ட் ட்ரம்பிடம் தெரிவித்தேன்.
அவர் இந்த விளம்பரம் குறித்து மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார்” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |