இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஆட்சி மாற்றம்! இந்தியா கூறும் காரணம்
இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியலமைப்புக்கு புறம்பான ஆட்சிமாற்றங்களுக்கு பலவீனமான நிர்வாகமே காரணம் என்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார்.
அந்நாட்டில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உரையாற்றுகையிலே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அதன்போது, ஆட்சித்திறன் என்பது அரசியல் நிலைத்தன்மையை நிர்ணயிக்கும் முக்கிய காரணி என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கங்களுக்கு உள்ள பெரும் சவால்
அத்தோடு, ஒரு நாட்டின் ஆட்சி ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும், ஒரு தேசத்தைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அதிகரித்து வரும் தேவைகளை எதிர்கொள்ளும் போது சாமானிய மக்களை திருப்திப்படுத்துவதே இன்று அரசாங்கங்கள் எதிர்கொள்ளும் சவால் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்தியா தற்போது எந்தவித அச்சுறுத்தலுக்கும் தக்க பதில் அளிக்கக்கூடிய வல்லமை பெற்றுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மேலும் கூறியுள்ளார்.