கனடா பயங்கரவாதிகளின் புகலிடம்! அலி சப்ரி பகிரங்க குற்றச்சாட்டு

Ali Sabry Sri Lanka Sri Lanka Final War India Canada
By Thahir Sep 26, 2023 09:29 AM GMT
Thahir

Thahir

கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளதாகவும் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.     

கனடா இந்திய இராஜதந்திர முறுகல் நிலை குறித்து நியுயோர்க்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக உறுதியான ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளை கனடா பிரதமர் முன்வைத்தமையை அலி சப்ரி கடுமையாக சாடியுள்ளார்.

கனடாவில் பயங்கரவாதிகள்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆதாரமற்ற பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர் என்பதால் அவரது கருத்துக்கள் தமக்கு ஆச்சரியமளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சில பயங்கரவாதிகள் கனடாவில் அடைக்கலம் பெற்றுள்ளதாகவும் ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சுபாவம்  கனடா பிரதமருக்குள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

இலங்கை விவகாரத்திலும் ஜஸ்டின் ட்ருடோ இதேபோன்ற கருத்துக்களை முன்வைத்ததாகவும் இனப்படுகொலை இடம்பெற்றதாக பொய் குற்றச்சாட்டை சுமத்தியதாகவும் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடா பயங்கரவாதிகளின் புகலிடம்! அலி சப்ரி பகிரங்க குற்றச்சாட்டு | Canada Harbors Terrorist Ali Sabri Say Genocide

இலங்கை இனப்படுகொலை

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை எனவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருப்பதாக கனட பிரதமர் முன்வைத்த குற்றச்சாட்டு காரணமாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலை உருவாகியுள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளம குறிப்பிடத்தக்கது.