பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக பிரச்சாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Pakistan
By Fathima Jun 04, 2023 11:40 PM GMT
Fathima

Fathima

பாகிஸ்தான்-இஸ்லாமாபாத்தில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கருத்துகளை பரப்பிய கிறிஸ்துவ இளைஞருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்துள்ளது.

இந்நிலையில், இங்கு லாகூரில் இருந்து 400 கி.மீ. துாரத்தில் உள்ள பஹ்வல்பூர் பகுதியைச் சேர்ந்த நவுமன் மாசிஹ் என்ற கிறிஸ்துவ இளைஞர் நான்கு ஆண்டுகளுக்கு முன், 'வாட்ஸாப்' செயலி வாயிலாக இஸ்லாமிய மதத்துக்கு எதிரான கருத்துகளை பகிர்ந்தார்.

நீதிமன்றத்தின் தண்டனை

பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக பிரச்சாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Campaign Against Religion Pak Kil Youth Hanged

இதையடுத்து, அவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்தனர்.

இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நவுமன் மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதுடன் இந்த வழக்கில் நேற்று முன்தினம்(03.06.2023) தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில், குற்றஞ்சாட்டப்பட்ட இவருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டதுடன் 20,000 ரூபாய் அபாராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.