கல்முனையில் ரணிலை ஆதரித்து பிரச்சார நடவடிக்கை

Ranil Wickremesinghe Kalmunai
By Mayuri Sep 08, 2024 06:48 AM GMT

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து கல்முனை மா நகரில் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் முருகேசு ராஜேஸ்வரன் தலைமையில் குறித்த நடவடிக்கை நேற்றைய தினம் (07.09.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு சந்திகள், கல்முனை சந்தை நகர வர்த்தக நிலையங்களுக்கு சென்ற முருகேசு ராஜேஸ்வரன், ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவினை வழங்குமாறு மக்கள் மற்றும் வர்த்தகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதேவேளை குறித்த நடவடிக்கை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGallery