அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு! கிடைத்துள்ள அனுமதி தொடர்பில் வெளியான தகவல்

Ranil Wickremesinghe Government Employee
By Mayuri Sep 03, 2024 12:59 PM GMT

2025 ஜனவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்ற வகையில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு செய்வதற்கு அமைவான ஒதுக்கீடுகளுக்கு திறைசேரியின் இணக்கப்பாடுடன் அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப் பெற்றிருப்பதாக, குறித்த அறிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்த நிபுணத்துவ குழுவின் தலைவர் உதய ஆர்.செனவிரத்ன தெரிவித்தார்.

பரிந்துரைகள் நடைமுறை

இதன்​போது அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான உதய செனவிரத்ன குழு அறிக்கையின் பரிந்துரைகள் நிதியமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அறிக்கையின் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அனைவரினதும் வருமானத்தை அதிகரிப்பதே தமது எதிர்பார்ப்பாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு! கிடைத்துள்ள அனுமதி தொடர்பில் வெளியான தகவல் | Cabinet Approves Salary Hike

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW