அத்தியாவசிய மருந்து கொள்வனவு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதி

Sri Lanka Sri Lanka Cabinet Medicines
By Fathima Dec 30, 2025 03:20 PM GMT
Fathima

Fathima

2026ஆம் ஆண்டிற்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஏனைய மருத்துவப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் திட்டத்திற்கு அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

முன்மொழிவு

உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான விருப்பக் கோரல்கள் மற்றும் முன்மொழிவுகளைக் கோருவதற்கு 2025 ஜூலை 21 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதலில் அனுமதி வழங்கப்பட்டது.

அத்தியாவசிய மருந்து கொள்வனவு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதி | Cabinet Approves Purchase Of Essential Medicines

இந்த அழைப்பிற்கு இணங்க, 48 நிறுவனங்கள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தன.

உயர்மட்ட நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து மருந்துகளைக் கொள்வனவு செய்யும் ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.