ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Election Commission of Sri Lanka Election
By Mayuri Sep 11, 2024 12:31 PM GMT

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3406ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் நேற்று மாலை வரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

தீர்வு காணப்பட்டுள்ள முறைப்பாடுகள்

அதேநேரம், நேற்றைய தினம் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 183 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு | Cabinet Approves Import Duty Revision

இதுவரையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில், 2638 முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மிகுதி 768 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW