அமைச்சரவை வழங்கிய விசேட அனுமதி

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Cabinet President of Sri lanka Economy of Sri Lanka
By Chandramathi Jun 28, 2023 01:50 PM GMT
Chandramathi

Chandramathi

உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று(28.06.2023) மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்திலே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதற்கான அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்தார்.

விசேட கலந்துரையாடல்

அமைச்சரவை வழங்கிய விசேட அனுமதி | Cabinet Approves Debt Restructuring Idea

இதேவேளை, உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இதேவேளை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விவாதிப்பதற்காக நாடாளுமன்றமும் சனிக்கிழமை(01.07.2023) அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW