புற்று நோயாளர் தொடர்பில் அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்

Cancer Sri Lanka Cabinet Sri Lankan Peoples Hospitals in Sri Lanka
By Rakshana MA Mar 05, 2025 07:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் புற்றுநோய் பதிவேடு வேலைத்திட்டத்தின் ஊடாக புற்றுநோய் கண்காணிப்பை வலுப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் இச்செயன்முறையை நடைமுறைப்படுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கூற்றுப்படி,

ப்ளூம்பெர்க் தொண்டு நிறுவனங்கள் (Bloomberg Philanthropies) மற்றும் ஆஸ்திரேலியாவின் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட டேட்டா ஃபார் ஹெல்த் (D4H) முன்முயற்சித் திட்டம், 20க்கும் மேற்பட்ட குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்குத் தீர்க்கமான பொதுச்சுகாதாரத் தகவலைச் சேகரித்துப் பயன்படுத்துவதை வலுப்படுத்த தொழில்நுட்ப ஆதரவை வழங்குகின்றது.

மீண்டும் திறக்கப்படும் யால தேசிய பூங்கா

மீண்டும் திறக்கப்படும் யால தேசிய பூங்கா

அமைச்சரவை அங்கீகாரம்

அந்த வேலைத்திட்டத்துடன் இணைந்து செயற்படும் வைட்டல் ஸ்ட்ராட்டஜிஸ் நிறுவனம், இலங்கையில் சுகாதாரத் துறையில் தரவு முன்முயற்சிகளில் முன்னுரிமை அளிக்கப்பட்ட தொழில்நுட்ப பங்காளியாகச் செயற்பட்டு, இதுவரை 03 திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட பல மாவட்டங்களில் மக்கள்தொகை அடிப்படையிலான புற்றுநோய் பதிவேடு திட்டங்களை வலுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்க இன்ஸ்டிடியூட் ஆஃப் வைட்டல் ஸ்ட்ராடஜீஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.

புற்று நோயாளர் தொடர்பில் அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம் | Cabinet Approves Cancer Registry Program Launch

இந்நிலையில், இவ்வாறு முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ், அந்த நிறுவனத்தின் நிதி நிறுவனமான இலங்கை சுகாதார தகவல் சங்கம் மூலம் அடையாளம் காணப்பட்ட நடவடிக்கைகளுக்கு சுமார் 19.50 மில்லியன் ரூபாய் செலவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்படி, முன்மொழியப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, வைட்டல் ஸ்ட்ராட்டஜிஸ் நிறுவனத்திற்கும் சுகாதார அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு, சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு

அம்பாறையில் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பில் வெளியான தகவல்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பில் வெளியான தகவல்

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW