அமைச்சரவையில் விரைவில் மாற்றம்! வெளியான தகவல்

Sri Lanka Sri Lanka Podujana Peramuna Sri Lankan political crisis Japan
By Fathima May 29, 2023 11:42 PM GMT
Fathima

Fathima

எதிர்வரும் சில தினங்களில் இரண்டு அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று நாடு திரும்பியுள்ள நிலையில், இரண்டு அமைச்சுப் பதவிகளிலும் மிக விரைவில் மாற்றம் இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவையில் விரைவில் மாற்றம்! வெளியான தகவல் | Cabinet Appointment Srilanka

சிரேஷ்ட எம்.பிக்களுக்கு அமைச்சு பதவி

எவ்வாறாயினும், அந்தப் பதவிகளுக்கு யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட எம்.பிக்கள் அமைச்சுப் பதவிகளுக்காகக் காத்திருக்கின்றனர் என்றும், அவர்களுக்கு இரண்டு அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவுள்ளது என்றும் அரசியல் தரப்புகள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த காலங்களில் பல தடவைகள் சிரேஷ்ட எம்.பிக்களுக்கு அமைச்சுப் பதவிகளைக் கோரிய போதும் அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.