பாடசாலை போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lanka
Sri Lankan Schools
By Benat
பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கப்படும் கட்டணம்
இன்று முதல்(01) நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கட்டண அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, 10 வீதம் முதல் 15 வீதத்தினால் இந்த கட்டணம் அதிகரிப்படவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.