பேருந்து நடத்துனர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Laksi
பேருந்து பயணத்தின் போது நடத்துனர் மிதிபலகையில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த விதிமுறைகளை மீறும் நடத்துனர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார்.
முறைப்பாடுகள்
பேருந்து பயணத்தை முன்னெடுப்பதில் காணப்படும் போட்டித்தன்மை காரணமாக சில நடத்துனர்கள் அவதானமின்றி மிதிபலகையில் பயணிப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |