மோட்டார் சைக்கிளுடன் பேருந்து மோதி விபத்து: இரண்டு வெளிநாட்டவர் பலி
Galle
Matara
By K. S. Raj
காலி - மாத்தறை பிரதான வீதியில் மிதிகம பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும், பஸ் ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் உயிரிழந்தனர்.
குறித்த விபத்தானது இன்று(30.01.2024) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.