மொனராகலையில் பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து!
Accident
Weather
Srilanka Bus
By Fathima
மொனராகலை பகுதியில் 23 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக கும்புக்கன் ஓயா பெருக்கெடுத்து ஓடியதால், வெல்லவாய-கொழும்பு பிரதான வீதியின் கும்புக்கன் பகுதி நீரில் மூழ்கியுள்ளது.
மீட்பு முயற்சிகள்
இந்த நேரத்தில், 23 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

அதன் பின்னர் பேருந்தில் இருந்த பயணிகளை விரைவாக மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், பேருந்தையும் தண்ணீரில் இருந்து வெளியே எடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.