பண்டாரவளை நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்து: ஐந்து பேர் வைத்தியசாலையில்

Hambantota Sri Lanka Accident
By Raghav Jul 06, 2024 05:29 AM GMT

ஹம்பாந்தோட்டை (Hambantota) –  பத்தேவெலயிலிருந்து பண்டாரவளை (Bandarawela) நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு (Sri Lanka Transport Board) சொந்தமான பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று (06.07.2024) காலை இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், பேருந்து வீதியை விட்டு விலகி கால்வாயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

விபத்தின் போது, ​​பேருந்தில் சுமார் 18 பேர் இருந்ததாகவும், அதில் 05 பேர் காயமடைந்து தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல (Ella) காவல்துறையினர் தெரிவித்தனர்.

பண்டாரவளை நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்து: ஐந்து பேர் வைத்தியசாலையில் | Bus Accident Towards Bandarawela

இந்த விபத்தில் பேருந்து சேதமடைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை எல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்