சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது
பல்வேறு சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்த பிரித்தானிய பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடம் இருந்து சுழல் துப்பாக்கி, ஒரு 'ரம்போ' கத்தி,10 தோட்டாக்கள் மற்றும் 5 வெற்றுத்தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் நடவடிக்கை
பார்க்கர் ரொபர்ட் மைக்கேல் என்ற 54 வயதான இந்த பிரித்தானியர், இங்கிலாந்து செல்லும் விமானத்தில் ஏறத் தயாரான நிலையில் அவரது பொருட்கள் திரையிடப்பட்டன. இதன்போதே ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

எனினும் இதில் சுழல் துப்பாக்கி தமது பாட்டியினால் தமக்கு பரிசளிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதுடன் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.