கல்லடி பழைய பாலத்திலுள்ள பிரிட்ஜ் மார்க்கெட் தீக்கிரை : வெளியான தகவல்கள்

Batticaloa Sri Lanka Sri Lankan Peoples Eastern Province Crime
By Rakshana MA Dec 28, 2024 12:56 PM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு - கல்லடி(Kalladi) பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பத்திலுள்ள பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தைத்தொகுதி(Bridge Market) அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தீயிடப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று(27) நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்களால் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சந்தைத்தொகுதியானது நஞ்சற்ற உணவு வகைகளை விற்பனை செய்யும் இடமாக காணப்படுகின்றது.

கல்முனையில் தேசிய ரீதியாக சாதனைக்கு காரணமான 500 ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு

கல்முனையில் தேசிய ரீதியாக சாதனைக்கு காரணமான 500 ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு

வியாபாரம்

மேலும், இச்சந்தையில் சுமார் 12 வருடங்களாக பெண்கள் தலைமை தாங்கும் 30 குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தமது வாழ்வாதாரத்திற்காக நாளாந்தம் மரக்கறி, அரிசி, அரிசி மா, தேன், நெய், கருவாடு போன்ற பல உள்ளூர் உற்பத்திப்பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

கல்லடி பழைய பாலத்திலுள்ள பிரிட்ஜ் மார்க்கெட் தீக்கிரை : வெளியான தகவல்கள் | Bridge Market At Kalladi

நாளாந்தம் காலை 7 மணி முதல் பி.ப 2 மணி வரை வியாபார நடவடிக்கையில் இவர்கள் ஈடுபடுவதுடன், அதனைத் தொடர்ந்து பிற்பகல் வேளையில் குறித்த பகுதியில் மரக்கறி, பழவகை போன்ற பொருட்களை வெளியிடத்திலுள்ள வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு குறித்த சேதப்படுத்தும் செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், மனநலம் பாதிக்கப்பட்டவராக அடையாளப்படுத்தப்பட்ட மட்டக்களப்பை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்முனையில் ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி

கல்முனையில் ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி

அதிகரித்த குற்றச்செயல்கள் 

கடந்த சில மாதங்களாக குறித்த சந்தைக்கு அருகில் கடமையிலிருந்த பொலிஸாரின் கடமைகள் நிறுத்தப்பட்டதன் பின்னர் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கல்லடி பழைய பாலத்திலுள்ள பிரிட்ஜ் மார்க்கெட் தீக்கிரை : வெளியான தகவல்கள் | Bridge Market At Kalladi

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை தொடக்கம் வெல்லாவெளி வரையான பகுதிகளில் இருந்து தமது வாழ்வாதாரத்தினை ஈட்டுவதற்காக நாளாந்தம் போக்குவரத்திற்காக அதிக செலவினை மேற்கொண்டு மட்டக்களப்பு நகரிலுள்ள மக்களுக்கு நஞ்சற்ற உணவு பொருட்களை சேவை மனப்பான்மையுடன் குறைந்த விலையில் விற்பனை செய்து வரும் இவர்கள் தமக்கான நீதியை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், குறித்த வியாபாரிகளின் நன்மை கருதி பல இலட்சம் பெறுமதியான உதவிகளை மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவரும் பிரபல வர்த்தகருமான தேசபந்து மா.செல்வராசா மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இஸ்லாம் கூறும் ஒட்டகம் - ஒரு விதிவிலக்கான அதிசயம்..!

இஸ்லாம் கூறும் ஒட்டகம் - ஒரு விதிவிலக்கான அதிசயம்..!

2025இல் அதிகரிக்கப்போகும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம்!

2025இல் அதிகரிக்கப்போகும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம்!

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGallery