கல்முனையில் ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி
ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து கல்முனை தமிழ்ப் பிரதேசங்களில் இன்று (27) அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
கடந்த 2004 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் 1364 பேர் உயிரிழந்திருந்தனர்.
இன்று கல்முனை சவக்காலை வீதியின் கடற்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன் பொதுமக்கள் உறவுகளை நினைத்து கண்ணீர் சிந்தி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
அஞ்சலி
ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளின் ஒப்பாரிச் சத்தத்தினாலும், கண்ணீராலும் கல்முனைப் பிரதேசம் சோகமாக காட்சியளித்தது.
இதேபோன்று பாண்டிருப்பு சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பும் மக்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
பாண்டிருப்பில் சுனாமி அனர்த்தத்தில் 486 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |