மாவடிப்பள்ளி- வண்டு வீதி முற்றாக சேதம்: விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கை

Ampara Climate Change Eastern Province
By Laksi Dec 27, 2024 11:47 AM GMT
Laksi

Laksi

காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட சாய்ந்தமருது - மாவடிப்பள்ளி செல்லும் வண்டு வீதி நீண்ட காலமாக குன்றும்,குழியுமாக உடைந்து சேதமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் குறித்த வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள் , விவசாயிகள் ,வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சாய்ந்தமருது - மாவடிப்பள்ளி செல்லும் உள்ளக வீதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்திருந்தது, இதனால் தற்போது இந்த வீதிகள், ஆங்காங்கே உடைந்து காணப்படுகின்றன.

சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் கடும் நடவடிக்கை:விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் கடும் நடவடிக்கை:விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

விவசாயிகள் கோரிக்கை

மழை அதிகரிக்கும் போது வீதிக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதனால், குறித்த இந்த வீதியை பயன்படுத்தும் போது வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

மாவடிப்பள்ளி- வண்டு வீதி முற்றாக சேதம்: விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கை | Flood Affected Mavadipalli Road Completely Damaged

விவசாயிகள்,பொது மக்கள் போக்குவரத்துச் செய்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் இந்த வீதியின் சரியான வடிகான்களை புணரமைப்புச் செய்து தருமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

குறித்த வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்தமையினால் அண்மையில் ஆறு மத்ரஸா மாணவர்கள் உட்பட எட்டு பேர் நீரில் மூழ்கி மரணமானதும் குறிப்பிடத்தக்கது. 

கிழக்கு மாகாண திணைக்களங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கிழக்கு மாகாண திணைக்களங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

களுவாஞ்சிக்குடியில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் இரும்பு கூடாரம் அமைப்பு

களுவாஞ்சிக்குடியில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் இரும்பு கூடாரம் அமைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGallery