பாணின் விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Sri Lanka Sri Lankan Peoples
By Mayuri Jul 27, 2024 04:56 AM GMT
Mayuri

Mayuri

பாணின் விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளுமாறு புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஐ.உடுவர குறிப்பிட்டுள்ளார்.

பாண் விலை குறைப்பு

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாணின் விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை | Bread Price Today In Sri Lanka

இவ்வாறான நிலையிலேயே சோதனை நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனவரி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் சட்டப்படியான எடை மற்றும் அளவீட்டு உபகரணங்களை சோதனையிட்டதில் 210 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட உதவி அளவீட்டு அலகு தர நிர்ணய சேவை அத்தியட்சகர் தில்ருக் பட்டியாபொல தெரிவித்துள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW