பாண் விலை குறைக்கப்பட்டது
Food Shortages
Sri Lankan rupee
Sri Lanka Food Crisis
Economy of Sri Lanka
Money
By Fathima
நாட்டில் பாணின் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 450 கிராம் எடையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பானது இன்று (20.06.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது பாணின் விலையானது 140 ரூபா முதல் 160 ரூபா வரையான விலைகளில் விற்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.